ஜெர்மனியில் அகதிகளுக்கு வெளியான தகவல் – அமுலாகும் கட்டுப்பாடு
ஜெர்மனியின் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு பல நடைமுறைகளை அரசியல் வாதிகள் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அகதிகள் ஜெர்மன் நாட்டுக்குள் வருவதை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை ஈடுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்திடம் பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.
பல மாநிலங்கள் தற்பொழுது இந்த அகதிகள் விடயத்தில் டுரிங்கன் மாநிலமானது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து இருக்கின்றது.
டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து டுரிங்கன் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமான கிரைஃப் மாவட்டமானது அகதிகளுக்கு எதிர் வரும் காலங்களில் பெட்சால் காட் என்று சொல்லப்படுகின்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்னான அட்டைகளை விநியோகம் செய்வதற்கு முன் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பெட்சால் காட் என்று சொல்லப்படுகின்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய அட்டையை அகதியான ஒருவர் 100 யுரோக்களை மட்டும் பணமாக பெற முடியும் என்றும், மற்றைய விடயம் தொடர்பில் அவர்கள் பொருட்களை மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என்றும் தெரியவந்துள்ளது.