ஆஸ்திரேலியாவில் பிரதான நகரங்களில் பாரிய அச்சுறுத்தலாக மாறிய எலிகள்
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சில கடலோர நகரங்களில் எலிகள் படையெடுத்து பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
கரும்பா, நார்மன்ட்டன் நகரங்களில் எலிகள் எங்கும் காணப்படுவதாகக் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
எலிகள் கார்களில் உள்ள கம்பிவடங்களைக் கடித்துவிடுவதாகவும் செல்லப்பிராணிகளை அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரைகளில் அன்றாடம் பல எலிகள் மாண்டுகிடக்கக் காணப்படுவதாக மீனவர்கள் கூறினர். அவை கடலில் கலந்துவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இறந்துகிடக்கும் எலிகளால் கடற்கரையில் துர்நாற்றம் வீசுகிறது. கடற்கரைகளைச் சுத்தம்செய்ய அதிகாரிகள் முயல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் பெரு மழை பெய்துள்ளதால் அதிகப் பயிர்கள் விளைந்துள்ளன. எலிகள் அவற்றைச் சாப்பிட வெவ்வேறு பகுதிகளுக்குப் படையெடுத்துச் செல்கின்றன.
வரும் வாரங்களில் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் எலிகளின் பிரச்சினை மோசமாகக்கூடும் என்று கருதப்படுகிறது.