முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்!
இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது. ஆரோக்கியமான தலைமுடியை பெற மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க வைட்டமின் ஏ முக்கியமானது.
அவகேடோ வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் கருப்பொருட்களை கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உடைவதைத் தடுக்கும்.
முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பயோட்டின், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முடி உதிர்வதைத் தடுக்கிறது.
தயிரில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி ஆரோக்கியத்திற்கு அவசியமானவை மற்றும் முடி உதிர்வதைக் குறைக்க உதவும்.
பசலைக் கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது முடி உதிர்வதைத் தடுக்க உதவும்.
பாதாம், ஆளி விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான முடியை பெற உதவுகிறது.