வடமாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள வைத்தியர்களின் போராட்டம்!
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03.11) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (02.11) அமுல்படுத்தப்பட்டது.
இதன்படி, வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும் 7ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.
வரிச்சுமை, வாழ்க்கைச் செலவு, சுகாதார நெருக்கடி, மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில்சார் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.