கிழக்கு சிரியாவில் இரு இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
கிழக்கு சிரியாவில் அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்களில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தளங்கள் ஈரான் மற்றும் ஈரானிய ஆதரவு குழுக்களால் பயன்படுத்தப்பட்ட மையங்களாக அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 21 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகள் ஈராக்கில் 12 முறையும், சிரியாவில் நான்கு முறையும் தாக்கப்பட்டுள்ளன.
ஈராக்கில் 2,500 அமெரிக்கப் படைகளும், சிரியாவில் 900 அமெரிக்கப் படைகளும் நிலைகொண்டுள்ளன.
ஷசிரிய இலக்குகள் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இஸ்ரேலுக்கு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.