டொனால்ட் டிரம்ப்பிற்கு 5,000 டொலர் அபராதம் விதித்த நீதிமன்றம்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு 5,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர்தர் இங்கொரோன் அவரின் ஊழியர்களைப் பற்றி வழக்கில் சம்பந்தப்பட்டோர் பொதுமக்களிடையே பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தபோதும் டிரம்ப் அதனை மீறினார்.இதனால் 77 வயது திரு. டிரம்ப் அடுத்த 10 நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும், மீண்டும் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்.
அதிக அபராதத் தொகையுடன் சிறைத்தண்டனைகூட விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார். டிரம்ப் அவரின் சமூக ஊடகத் தளத்தில் நீதிபதியின் ஊழியர் ஒருவரை அவமதித்துக் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.எனினும் அந்தப் பதிவு அன்றே நீக்கப்பட்டுவிட்டாலும் டிரம்ப்பின் 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரசார இணையப்பக்கத்தில் 17 நாள்களுக்கு இருந்ததாக கூறப்படுகின்றது.