இஸ்ரேலியர்களுக்கு விசாவை தளர்த்திய அமெரிக்கா!
அமெரிக்காவுக்கு பயணிக்கும் இஸ்ரேலியர்கள், 90 நாள்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலை விசா தள்ளுபடி திட்டத்தில் அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 40 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தகுதி பெற்றிருந்தன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இஸ்ரேலும் இணைந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, நவம்பர் 30ஆம் தேதி முதல் இஸ்ரேலியர்கள் விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
(Visited 3 times, 1 visits today)