இந்தியா – கனடா பிரச்சினை : இருநாட்டு தூதுவர்கள் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!
இந்தியாவில் உள்ள தனது இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை கனடா 62 இலிருந்து 21 ஆகக் குறைத்ததன் மூலம், சர்வதேச மாணவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து சென்றுள்ள நிரந்தர குடியிருப்பாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கனடாவும் 41 இராஜதந்திரிகள் வெளியேறுவதை அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, “துரதிர்ஷ்டவசமாக, இந்த வெகுஜன வெளியேற்றம் எங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
குளோபல் அஃபர்ஸ் கனடா வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், ஜோலி, “இப்போது தூதரகங்களில் உள்ள அனைத்து தனிப்பட்ட சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.
“இந்தியாவின் முடிவு இரு நாட்டு குடிமக்களுக்கான சேவைகளின் அளவை பாதிக்கும்” என்று ஜோலி மேலும் கூறினார்.