ஸ்காட்லாந்தில் வரலாறு கனமழை : சிவப்பு வானிலை எச்சரிக்கை

ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் கனமழை மற்றும் கடுமையான காற்றுக்கான சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாபெட் புயல் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு காற்று மற்றும் மழையின் மஞ்சள் கடுமையான வானிலை எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது .
மேலும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என்றும், சில பகுதிகளில் பல நாட்கள் துண்டிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)