Gmailஇல் அறிமுகமாகும் புதிய வசதி
மொபைல் போனில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் செயலியில் நீண்ட காலமாக கேட்கப்பட்டு வந்த செலக்ட் ஆல் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலகம் முழுவதும் தகவல்களை உடனடியாக அனுப்ப ஜிமெயில் செயலி முக்கிய தொலைத்தொடர்பு சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜிமெயிலில் அனுப்பும் புகைப்படங்கள் சரியான தரத்தில் சென்றடைவதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப ஜிமெயில் அதிகம் பயன்படுத்துகின்றது. மேலும் ஜி மெயிலில் அனுப்பப்பட்ட செய்திகளை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் பதிவேற்றம் செய்ய முடியும் மீண்டும் பார்க்க முடியும் என்பதால் ஜி மெயில் பயன்பாட்டை பல நிறுவனங்கள் தொழில் முறை சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கிய தொலைதொடர்பு சாதனமாக பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் ஜிமெயில் செய்திகள், குறுஞ்செய்திகள், விளம்பர தகவல் என்று தொடர்ந்து பரிமாறப்படுவதால் உடனுக்குடன் ஜிமெயிலின் செயல்திறன் முழுமை அடைந்து விடுகிறது. அதனால் புதிய செய்திகள் வருவதற்கு பழைய செய்திகளை டெலிட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பழைய செய்திகளை முழுமையாக டெலிட் செய்யக்கூடிய வசதி இல்லாததால் குறிப்பிட்ட செய்திகளை தேர்வு செய்து தனித்தனியாகவே டெலிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் போனில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் செயலியில் இது பிரதான பிரச்சனையாக உள்ளது. இதனால் ஜி மெயில் பயன்பாட்டாளர்கள் குறிப்பிட்ட செலக்ட் ஆல் வசதியை இணைக்க வேண்டும் என்று பலமுறை ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தற்போது ஜிமெயில் நியூ அப்டேட் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நியூ அப்டேட்டில் செலக்ட் ஆல் வசதி உள்ளதால் ஜிமெயில் பயன்பாட்டாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் ஜிமெயில் பயன்பாட்டாளர்கள் பயனடைவர் என்பது சந்தேகம் இல்லை.