கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (06.09) விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வரும் 08 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், 08 ஆம் திகதி பின்நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
நாட்டின் சுகாதாரத்துறை சமீபகாலமாக அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி, அரச அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து மருந்து கொள்வனது, மற்றும் அவ்வாறான மருந்தைகளை பயன்படுத்தியமையால் ஒவ்வாமை ஏற்பட்டு பெருமளவான மக்கள் உயிரிழப்பது என பல்வேறு சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.