இந்தியாவிற்கு பதிலாக பாரதம்:வெடித்த சர்ச்சை
G20 உச்சி மாநாடு எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், G20 மாநாட்டிற்கான விருந்துபசார அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிடப்பட்டுள்ளமை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டிருப்பதை பலரும் விமர்சித்து வருவதுடன், சிலர் ஆதரவான கருத்துகளையும் வௌியிட்டு வருகின்றனர்.
G20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
டெல்லியில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்கவுள்ளனர்.
மாநாட்டின் ஆரம்ப தினத்தில் (09) இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரச தலைவர்களுக்கு விருந்தளிக்கவுள்ளார்.
இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டிருப்பதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இவ்வாறு அச்சிடப்பட்டிருப்பது உண்மை தான் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் ‘X’ பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர், “இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 1 இனி இந்தியா என்றழைக்கப்பட்ட பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என வாசிக்கப்படும் போல. மாநிலங்களின் ஒன்றியம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப்போகிறோம் என சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும் தான் மாற்ற முடிந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சில கட்சிகளின் கூட்டணிப் பெயர் இந்தியாவாக இருப்பதால், நாட்டின் பெயரை மாற்றுவார்களா என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் பாரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு இந்திய மத்திய அமைச்சர்களும் ஆளும் பாரதிய ஜனதாக கட்சியின் பிரமுகர்களும் மகிழ்ச்சியை வௌியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.