ஜெர்மனியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெளிநாட்டவர்களை எதிர்பார்க்கும் நிலை
தொழிற்பயிற்சி பெறுகின்றவர்களின் எண்ணிக்கை என்பது குறைவடைந்து வருவதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் தொழிற்பயிற்சி பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கையானது தற்பொழுது படிப்படியாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்பொழுது 1.2 மில்லியன் பேர் இவ்வாறு தொழிற்கல்வியை மேற்கொள்வதாகவும் இதேவேளையில் கடந்த ஆண்டு மட்டும் 469900 பேர் இவ்வாறு தொழிற்கல்வியை ஆரம்பித்ததாக தெரியவந்து இருக்கின்றது.
இந்நிலையில் கொரோனா காலத்துக்குமுற்பட்ட காலங்களில் தொழிற்கல்வியை பெற ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கையானது 544000 பேர் ஆக இருந்தது.
இந்நிலையில் கொரோனாவிற்கு பிற்பட்ட காலங்களில் இவ்வாறு தொழிற் பயிற்சிகளை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் இந்த குறைவானது 0.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)