பிரித்தானியாவில் உயர் பணவீக்கத்தால் நசுக்கப்படும் அடித்தட்டு மக்கள்!
பிரித்தானியாவில் உயர் பணவீக்கத்தால் “அடிமட்டத்தில் உள்ள மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியரும், அமைச்சரவை அலுவலகத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணருமான ஜொனாதன் போர்டியஸ் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பணக்கார குடும்பங்களை விட ஏழ்மையான குடும்பங்கள் பணவீக்கத்தை 3% அதிகமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய வேலைவாய்ப்பு சந்தை புள்ளிவிவரங்கள், குறைந்த வருமானம் பெறுபவர்களை விட அதிக வருமானம் உள்ளவர்கள் அதிக சம்பள உயர்வு பெறுவதைக் காட்டுகிறது என்றார்.
மேலும் இது வட்டி விகித உயர்வுடன் இங்கிலாந்து வங்கியால் தீர்க்க முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
“அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதன் மூலம் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.