ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது!

கெர்ச் பாலம் அருகே ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு சேவை, “வெற்றிகரமான சிறப்பு நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ள இரசாயன டேங்கர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரே இரவில் தாக்கப்பட்ட டேங்கர் “ரஷ்ய கூட்டமைப்பின் மிகவும் சக்திவாய்ந்த எண்ணெய் டேங்கர்களில் ஒன்று” என்று கூறப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)