இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் இணக்கம்!

எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஜப்பானிய குழுவினர் இன்று (29.07) இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறுகையில், அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பீட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)