port cityயில் 1.2 பில்லியன்களை முதலீடு செய்யும் சீன நிறுவனம்!
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் (CHEC) தலைவர் (Bai Yinzhan) இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் தலைவர் Bai Yinzhan ஐ இன்று (26.06) சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவது குறித்து, Bai Yinzhan உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)