வட அமெரிக்கா

இந்தியா தன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கானோரை ஊக்கப்படுத்துகிறது – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதியும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது, இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன.இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

எனது சிறுவயதில் சென்னையில் எனது தாத்தா, காலை வேளையில் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது நான் அவரது கையை பிடித்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனமாக கேட்பேன். சுதந்திர போராட்ட வீரர்கள், இந்தியாவின் சுதந்திரம் பற்றி தெரிந்து கொண்டேன். ஊழலை எதிர்த்து போராடுவதன் முக்கியத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான முக்கியத்துவம் பற்றி அவர்கள் பேசியது எனக்கு நினைவு இருக்கிறது.

சிறு வயதில் தாத்தாவுடன் நடந்த உரையாடல்கள் எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது தாத்தா பி.வி.கோபாலனிடமிருந்தும் என் தாய் ஷியாமளாவின் அர்ப்பணிப்பு, உறுதி, தைரியம் ஆகியவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் நான் உங்கள் முன்பு துணை அதிபராக நிற்பதற்கு காரணம்.” இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்