டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து விசாரணை செய்வதில் சிக்கல்!
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடல் பகுதியில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான நிலையில், இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் இடிந்து விழுந்த பகுதியைத் தேடும் பணியில் கடல்சார் ஏஜென்சிகள் இன்னும் மும்முரமாக இருப்பதால் முறையான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து விசாரணைகள் எப்போது ஆரம்பிக்கப்படும், விசாரணைக்கு யார் தலைமை தாங்குவார் என்பது குறித்த தகவல்களை தீர்மானிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக டைட்டன் கப்பலான OceanGate Expeditions என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்குகிறது. ஆனால் இந்த கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த நிறுவனம் மூடப்பட்டது.
இதற்கிடையில், டைட்டனின் தாய்க் கப்பலான போலார் பிரின்ஸ் கனடாவில் இருந்து வந்தது, மேலும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்கள் இங்கிலாந்து, பாகிஸ்தான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களாவர்.
ஆகவே இது குறித்த விசாரணைகளை எந்த நாடு முன்னெடுக்கும், யார் முன்னெடுப்பார்கள் என்பதை தீர்மானிப்பதில் சிக்கல் நிழவுவதாக கூறப்படுகிறது.