முதல் மூன்று மாதங்களிலேயே சுருங்கிய இலங்கையின் பொருளாதாரம்!
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் பொருளாதாரம் முந்தைய ஆண்டை விட 11.5% சுருங்கியுள்ளதாக அரசாங்க தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாடு கடந்த தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (15) வீழ்ச்சிக் கண்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்றும் விகிதத்தின் படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்முதல் பெறுமதி, 311 ரூபாய் 60 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபாய் 92 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரின் விற்பனை விலை உயர்ந்துள்ள நிலையில் உரிமம் பெற்ற மற்ற வணிக வங்கிகளில், விற்பனை விலையானது 335 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 315 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.