பிரான்ஸில் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்க தயாராகும் அரசாங்கம்
பிரான்ஸில் பாடசாலைகளில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வன்முறைகளை தடுத்து நிறுத்த இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
கடந்த மே 12 ஆம் திகதி, Lindsay எனும் சிறுமி பாடசாலையில் இடம்பெற்ற வன்முறையினால் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இந்த 13 வயதுச் சிறுமியின் தற்கொலை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைகளுக்குள் வன்முறைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றும் போது, “துன்புறுத்தல் காரணமாக பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
இந்த வன்முறை தீவிர மன அழுத்தத்தையும், சில வேளைகளில் தற்கொலைகளைகளையும் தூண்டுகிறது. Lindsay (தற்கொலை செய்த சிறுமி) எங்கள் கண் முன் நிகழ்ந்த உதாரணமாகும்!” என தெரிவித்தார்.
மேலும், புதிய கல்வி ஆண்டில் இருந்து பாடசாலைகளில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.