டார்க் சாக்லெட்டை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? அவதானம்
அதிக கொக்கோ கொண்ட டார்க் சாக்லேட்டுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தாதுக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. மேலும் இவை நமது இதய ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது.
ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடும் போது அதிகமான அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் நம் உடலில் சேர வாய்ப்பு இருக்கிறது.
தரமான டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் சில தாதுக்கள் நிறைந்துள்ளன.
கோகோ மற்றும் டார்க் சாக்லேட்டுகளில் பலவிதமான சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மூலப் பொருட்களை கொண்டிருக்கின்றன. இவை மற்ற உணவுகளை விட டார்க் சாக்லேட்டில் அதிகமாக உள்ளது.
கோகோவில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் உடலின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தினை சீராக்க உதவுகின்றன. மேலும் இவை இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
டார்க் சாக்லேட்டுகள் நம் ரத்தத்தில் எல்டிஎல் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்படும் ஆபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.
கோகோவில் உள்ள ஃபிளவனால்கள் நம் சருமத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொக்கோ அல்லது டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் காஃபின் மற்றும் தியோப்ரோமைன் போன்றவை நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவிபுரிகிறது.
ஒரு நாளைக்கு 30 முதல் 60 கிராம் வரை டார்க் சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது. அதற்கு மேல் இவற்றை எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் காஃபின் அளவு அதிகரித்து சீரற்ற இதயத்துடிப்பு, வாந்தி, மயக்கம், தூக்கமின்மை போன்ற உபாதைகள் ஏற்படும்.