ஐரோப்பா செய்தி

மது அருந்தவே கட்சியில் இணைந்தேன் – வெளிப்படையாக கூறிய கன்சர்வேடிவ் கட்சி தலைவர்

சமூகமயமாக்குதல், மது அருந்துதல், இளைஞர்களுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற காரணங்களுக்காக ஆரம்பத்தில் கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்ததாக அந்த கட்சியின் தலைவர் கெமி படேனோக்  (Kemi Badenoch) தனது அரசியல் பயணம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிபிசி ரேடியோ 4 இன் டெசர்ட் ஐலேண்ட் (Desert Island ) நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மோசமான பொதுத் தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் கட்சியின் தலைமைப்பணியை ஏற்றுக் கொண்டார்.

இதன்பின்னர் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து, நீண்டகால திட்டங்கள் மற்றும் மீண்டும் வெற்றி பெறுதே தனது முக்கிய இலக்கு என்றும் படேனோக் கூறியுள்ளார்.

அவரது வாழ்க்கை அனுபவம் மற்றும் இசைத் தேர்வுகள், அவற்றில் ஹாமில்டன் (Hamilton) மற்றும் “Everybody’s Free (To Wear Sunscreen)” ஆகியவை அவருக்கு உத்வேகம் அளித்ததாக அவர் கூறினார்.

படேனோக், கன்சர்வேடிவ் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை வலியுறுத்தி, கட்சியை உறுதியுடன் வழிநடத்துவதாகத் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!