ஜெர்மனியில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் வெளிநாட்டு பிரஜைகள் ஜெர்மன் குடியுரிமை பெறுவது இப்பொழுது அதிகரித்து செல்வதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்திருக்கின்றது.
அதாவது ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு இவ்வாறு வெளிநாட்டு பிரஜைகள் ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்வது 28 சதவீதமாக உயர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரியா நாட்டை சேர்ந்த மொத்தமாக 48 300 பேர் இவ்வாறு ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக் கொண்டார்கள்.
இதேவேளையில் 2021 ஆம் ஆண்டு இவர்களுடைய தொகை 19100 ஆக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் உக்ரைன் நாட்டவர்கள் இவ்வாறு ஜெர்மன் பிரஜா உரிமை பெற்றார்கள்.
மூன்றாவது இடத்தில் துருக்கி நாட்டவர்கள் ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றார்கள். மொத்தமாக 171 வெளிநாடுகளை சேர்ந்த பிரஜைகள் இவ்வாறு ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டார்கள் என்று தெரியவந்திருக்கின்றது.