ஐரோப்பா

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வதற்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் அமுலில் உள்ளபோதும்,  சட்டவிரோதமாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

நெயில் பார்கள் மற்றும் டேக்அவே (takeaways) போன்ற இடங்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாக பணிப்புரிவதாக கண்டறிப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி 2025 ஆம் ஆண்டில் மட்டும்  8,971 நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக வேலை செய்பவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!