நாளை சி.ஐ.பியில் முன்னிலையாகிறார் விஜய்!
கரூர் பெருந்துயர் சம்பவம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Vijay, பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அவர் நாளை டெல்லி செல்கின்றார்.
சி.பி.ஐ. CBI விசாரணைக்காக நாளை (12) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் விஜய் பயணமாகின்றார்.
முற்பகல் 11 மணியளவில் சி.ஐ.பி. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார் என தெரியவருகின்றது.
அத்துடன், டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில்
கலந்துகொண்டவர்களில் 35 இற்கு மேற்பட்டோர் கூட்ட நெரிசலால் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.




