பிரிட்டனில் கிறிஸ்துமஸ் விற்பனை 5.9% உயர்வு
பிரிட்டனின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான நெஸ்ட் (Next), இந்த ஆண்டு தனது லாபம் 1.1 பில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விற்பனை எதிர்பார்த்ததை விட 5.9 சதவீதம் அதிகரித்ததே இந்த லாப உயர்விற்கு முக்கிய காரணமாகும்.
குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஆன்லைன் விற்பனை 38 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது.
இதன் எதிரொலியாக லண்டன் பங்குச்சந்தையின் FTSE 100 குறியீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இருப்பினும், பிரிட்டனின் வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் மந்தநிலை மற்றும் நுகர்வோர் பொருளாதார நெருக்கடி காரணமாக, வரும் 2026-ஆம் ஆண்டு வர்த்தகம் சற்று சவாலாக இருக்கும் என்றும் நெஸ்ட் (Next) நிறுவனம் எச்சரித்துள்ளது





