இந்தியா தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து : தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என உதயநிதி தெரிவிப்பு!

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில்,  தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்திருந்தது. அத்துடன் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல்களை மக்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீப்பதற்காக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட குழுவினர் ஒடிசா சென்றிருந்த நிலையில், தற்போது தமிழகம் திரும்பியுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில் 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்