முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவிற்கு விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர் கைது செய்யப்பட்டப்பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர் விளையாட்டு அமைச்சகம், தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சகம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





