திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சீனக்குடாவில் வசிக்கும் 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீனக்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





