உலகம் செய்தி

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பாளரின் வீட்டை தாக்கிய பாகிஸ்தான் – 09 குழந்தைகள் பலி!

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டில் பாகிஸ்தான் படைகள் குண்டு வீசி நேற்று தாக்குதல் நடத்தியதியுள்ளனர்.

இதில் ஒன்பது குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக தாலிபான்  செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  (Zabihullah Mujahid) தெரிவித்தார்.

குனார் (Kunar) மற்றும் பாக்டிகா (Paktika) மாகாணங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பெஷாவரில் (Peshawar) இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பில் மூன்று துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எல்லையின் நீடிக்கும் அமைதியின்மைக்கு தீர்வுக்காணும் முகமாக கடந்த ஒக்டோபர் மாதம் தோஹாவில் இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இருப்பினும் கருத்து வேறுப்பாடு காரணமாக இவ் போர்நிறுத்த ஒப்பந்தம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!