லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் மரணம்
நான்கு மாதங்களுக்கு பிறகு பெய்ரூட்டில்(Beirut) உள்ள ஹெஸ்பொல்லாவின்(Hezbollah) தலைமைத் தளபதியை குறிவைத்து இஸ்ரேல்(Israel) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் 28 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹரேத் ஹ்ரீக்(Haret Hreik) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது, இது ஹெஸ்பொல்லாவின் ஆதிக்கம் செலுத்தும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
தாக்குதலில் ஒரு மூத்த தளபதி குறிவைக்கப்பட்டதை ஹெஸ்பொல்லா உறுதிப்படுத்தியுள்ளது.





