உலகம்

கனடாவில் கரடிகள் அட்டகாசம் – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம்!

கனடாவின் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் பாடசாலை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை கிரிஸ்லி கரடி (grizzly bear ) தாக்கியுள்ளது.

இதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வான்கூவரில் (Vancouver) இருந்து வடமேற்கே 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் உள்ள  பெல்லா கூலாவில் (Bella Coola) நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முழுவதும் குறித்த பகுதியில் கரடியின் நடமாட்டம் இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையின் சம்பவ இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மக்கள் வீட்டுகுள் இருக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைக்கு செல்வதை தவிர்க்குமாறும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 4 times, 5 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!