பிரேசிலில் ஐ.நா காலநிலை பேச்சுவார்த்தை அரங்கத்தில் தீவிபத்து – 13 பேர் வைத்தியசாலையில்!
பிரேசிலில் ஐ.நா. காலநிலை பேச்சுவார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட அரங்குகளில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் 13 பேர் சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஆறு நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் தீவிபத்தை தொடர்ந்து குறித்த அரங்கம் 07 மணிநேரம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டர் செயலிழப்பு அல்லது ஒரு அரங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தீயைத் தூண்டியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் உள்ளுர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 4 times, 4 visits today)




