இந்தியாவிற்கு $93 மில்லியன் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவுக்கு(India) $93 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா(America) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விற்பனை, அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை உறவை வலுப்படுத்த உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிக்கும் என்று பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை தொகுப்பில் ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான FGM-148 ஜாவெலின் ஏவுகணைகள்(Javelin missiles), இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள்(lightweight missile launchers), பீரங்கிக் குண்டுகள்(artillery shells) அடங்கும்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை(Russian crude oil) டெல்லி(Delhi) வாங்கியதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) இந்தியப் பொருட்களின் மீதான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கிய பின்னர், வாஷிங்டனின்(Washington) வெளிநாட்டு இராணுவ விற்பனை (FMS) திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கும் முதல் பெரிய பாதுகாப்பு விற்பனை இதுவாகும்.





