ஆப்கானிஸ்தானில் மூன்று வேளை உணவு இல்லாமல் போராடும் குடும்பங்கள்
ஆப்கானிஸ்தானில் பொருளாதார மீட்சி சிக்கல்களை எதிர்கொள்ளும் விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
அந்நாட்டிலுள்ள 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் மூன்று வேளை உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவு அறிவித்துள்ளது.
சில குடும்பங்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கின்றன அல்லது கடன் வாங்கி உயிர் வாழ்கின்றன என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தாலிபான் இயக்கம் மீண்டும் ஆட்சி பீடமேறியதைத் தொடர்ந்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து 45 இலட்சத்துக்கும் மேலான ஆப்கான் பிரஜைகள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.
இதுவும் பொருளாதாரத்தின் மீது சுமையாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
(Visited 5 times, 5 visits today)





