பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா – அமெரிக்கா! 10 ஆண்டுகளுக்கான புதிய உடன்படிக்கை
அடுத்த பத்தாண்டுகளில் தமக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விஸ்தரித்துக் கொள்ளும் நோக்கத்துடன், இந்தியாவும், அமெரிக்காவும் சட்டக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Heggseth), இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தை மலேசியத் தலைநகரில் இடம்பெற்றது.
இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் வரி விதித்து வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் சூழ்நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய செய்தி வெளியாகிறது.
(Visited 4 times, 4 visits today)





