இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகலாம்
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் நிர்மூலமாகியுள்ள காசவை மீட்க சுமார் 25 வருடங்கள் வரை செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
போர் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகளும் தேவைப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு இடையே போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏவுகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களால் காசாவில் இடிந்து விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றுவது பாரிய செயன்முறையாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 500 தொன்களுக்கும் அதிகமான கட்டட சிதைவுகள் குவிந்துள்ளன.
இந்த சிதைவுகளை அகற்ற குறைந்தது பத்து வருடங்கள் வரை செல்லலாம்.
வளமான மண்ணுக்கும், நீண்ட நேரம் மத்திய தரைக்கடல் சூரிய ஒளிக்கும் பெயர் பெற்ற காசாவில், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களும் விளைந்தன.
இவ்வாறான நிலையில் 15000 இற்கும் அதிகமான ஹெக்டெயர் விவசாய நிலப்பரப்பு சேதமடைந்து விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





