வெளிநாடுகளில் தேடப்படும் இலங்கையர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை

வெளிநாடுகளில் தேடப்படும் இலங்கையர்களை கைது செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளிநாடுகளின் உதவியுடன் குறித்த சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை ரஷ்யா, ஓமான், துபாய், இந்தியா ஆகிய நாடுகளில் கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 15 பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர்கள் கைதுசெய்யப்பட்ட நாடுகளின் அதிகாரிகளின் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
(Visited 1 times, 1 visits today)