லோறியில் மறைத்துவைத்து 08 பேரை பிரித்தானியாவிற்குள் நாடு கடத்த முற்பட்ட இருவர் கைது!

குழந்தைகள் உட்பட எட்டு பேரை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நாடு கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூடவுன்ஹாமில்டன், கவுண்டி, அர்மாவைச் சேர்ந்த டேனியல் லோக்ரான் (36), அய்ல்ஸ்பரி, பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த 51 வயதான இயோன் நோலன் (51) ஆகியோர் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான லோக்ரானுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நோலன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார், ஆனால் ஏற்கனவே காவலிலும் ஊரடங்கு உத்தரவிலும் தனது தண்டனையை அனுபவித்துவிட்டார்.
வியட்நாமிய குடியேறிகளை சட்டவிரோதமாக லொறியொன்றில் மறைத்து வைத்து பிரித்தானியாவிற்குள் அனுப்ப அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கும்பல் ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரிடமும் £15,000 வசூலித்ததாக நம்பப்படுகிறது,