இத்தாலியில் சபிக்கப்பட்ட கற்களை திருடிய சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பொம்பெயிலில், கலைப்பொருட்கள் திருட முயன்ற 51 வயது ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டார்.
அவர் 5 கற்கள் மற்றும் 1 செங்கல் உள்ளிட்ட 6 பொருட்களை முதுகுப்பையில் வைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
சந்தேகத்துடன் நடந்த அவரது செயல்களை கவனித்த வழிகாட்டி பொலிஸாரை தொடர்பு கொண்டதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் மீண்டும் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியக பூங்காவிற்கு ஒப்படைக்கப்பட்டன.
இந்தச் செயலைத்தொடர்ந்து அவருக்கு 6ஆண்டு வரை சிறைத் தண்டனை மற்றும் 1500 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
கி.பி. 79 ஆம் ஆண்டு வெசுவியஸ் எரிமலை வெடிப்பால் அழிந்த பழங்கால நகரமான பொம்பெயில், 1748-இல் மீண்டும் கண்டறியப்பட்டது.
இந்த தளத்தில் திருடம் செய்யும் நபர்கள் துரதிர்ஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள் எனும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.