காசாவிற்கு கூடுதல் உணவு வழங்க திட்டம் – டிரம்பின் சிறப்புத் தூதர் உறுதி

கடந்த இரண்டு மாதங்களாக உதவிக்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான பசியுள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபை கூறிய நிலையில், அமெரிக்க ஆதரவு பெற்ற விநியோக மையத்தை ஆய்வு செய்த பின்னர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர் காசாவிற்கு கூடுதல் உணவு வழங்குவதற்கான திட்டத்தை உறுதியளித்துள்ளார்.
“இந்த வருகையின் நோக்கம், மனிதாபிமான நிலைமை பற்றிய தெளிவான புரிதலை வழங்குவதும், காசா மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க உதவுவதும் ஆகும்” என்று அவர் டிரம்பைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)