இலங்கை : ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தாரா பிள்ளையான்?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது ‘பிள்ளையானிடம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று இன்று (09) நாடாளுமன்றத்தில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால, பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை கடத்தியது, காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக ‘பிள்ளையான்’ தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்புகள் குறித்து பிள்ளையானுக்குத் தெரிந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறினார்.
பொது பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுப்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதால், மேலும் தகவல்களை வெளியிட மாட்டேன் என்று அவர் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 67,000 பக்க அறிக்கையை குற்றப் புலனாய்வுத் துறை (CID) மதிப்பாய்வு செய்து வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று முன்னதாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.