ஐரோப்பா

பிரான்ஸில் கொட்டி தீர்த்த மழை : நாடாளுமன்றத்தில் கசிவு!

பிரான்ஸில் ஒரு சில இடங்களில் பெய்த கனமழை மற்றும் புயலில் சிக்கி ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததுடன்,  17 பேர் காயமடைந்தனர்.

பாரிஸில் தெருக்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தின் கூரையில் கசிவு ஏற்பட்டதாகவும் இதனால் நாடாளுமன்ற அமர்வுகள் 15 நமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 39000 மின்னல் தாக்கம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 110,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரும் சில மணிநேரங்களில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கில் குறிப்பிடத்தக்க மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. வார இறுதியிலும் அடுத்த வாரத்திலும் ஐரோப்பா முழுவதும் அதிக வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்