இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கலிபோர்னியாவில் பதற்ற நிலைமை – குடியேற்ற போராட்டங்களை அடக்க தீவிர முயற்சி

கலிபோர்னியாவில் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களால் நிலவும் பதற்ற நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் தொகையில் கணிசமானோர் ஹிஸ்பானிக் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் ட்ரம்பின் தீர்மானத்திற்கு அமைவாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லொஸ் ஏஞ்ஜல்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அவர்கள் கடமையில் ஈடுபடுவார்களென தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு படையினரை மீள அழைக்குமாறு கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தலையீடு செய்யும் வரை தமது பிராந்தியத்தில் பிரச்சினை இருக்கவில்லையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை இறையாண்மை மீதான பாரிய மீறல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியாக செயற்படுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் கோரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்