IPL Match 69 – மும்பையை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த பஞ்சாப்

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது.
இதில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர்.
பஞ்சாப் அணிக்கு வெற்றியை உறுதி செய்த ஆர்யா 62 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சாண்ட்னர் கைப்பற்றினார்.
இறுதி கட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் கிங்ஸ் 187 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஐயர் 26 ரன்களுடனும், வதேரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.