இலங்கை

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 20 இலங்கையர்களை கைது செய்ய நடவடிக்கை

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 20 இலங்கையர்கள் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

குறித்த 20 பேரும் தலைமறைவாகியுள்ள நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 11 பேர் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!