Tesla நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மனிதரைப் போல் நடனமாடி அசத்தும் மனித இயந்திரம்!

Tesla நிறுவனத்தின் Optimus என்கிற மனித இயந்திரம் மனிதர்களைப் போல் நடனமாடி அசத்துகிறது.
Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் (Elon Musk) அந்தக் காணொளியை X தளத்தில் பகிர்ந்தார்.
அது பலரையும் வியக்க வைத்தது. சிலர் அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளியாக இருக்கக்கூடும் என்று கூறினர்.
இன்னும் சிலர் இதுபோன்ற மனித இயந்திரங்கள் தான் நமது எதிர்காலம் என்று பகிர்ந்தனர்.
எனினும் மஸ்க் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுத் தளமான Grok-யிடம் ஒருவர் Optimus-ஐ மதிப்பிடுமாறு கேட்டபோது…
Optimus இயந்திரம் நன்கு ஆடினாலும், உலகில் அதன் பயன்பாடு குறைவே என்று Grok பதிலளித்தது.
அதைவிடச் சிறந்த மனித இயந்திரங்கள் உண்டு என்றும் குறிப்பிட்டது.
(Visited 1 times, 1 visits today)