சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக டிரம்ப் அறிவிப்பு

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் சவுதி அரேபியா பயணத்தின் முதல் நாளன்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற சவுதி-அமெரிக்க முதலீட்டு மன்றத்தில் கலந்து கொண்டபோது அமெரிக்க ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்தார்.
இந்த வாரம் துருக்கியில் சிரிய வெளியுறவு அமைச்சரை அமெரிக்க ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாத் ஆட்சிக்குப் பிறகு நாட்டை நிலைநிறுத்தி அமைதியைப் பேண முயற்சிக்கும் சிரியாவில் ஒரு புதிய அரசாங்கம் வெற்றி பெறும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நிவாரணத்தை சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானி வரவேற்றுள்ளார்.