ஈரலில் கொழுப்பை கரைக்கும் முட்டை

சிக்கன், மட்டன் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் முட்டையைக் கொண்டு தொக்கு செய்து சாப்பிடுங்கள். முட்டை தொக்கு அருமையான செட்டிநாடு ரெசிபி போன்று மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடும் அளவில் மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.சரி, இப்போது சிம்பிளான முட்டை தொக்கு ரெசிபி பார்ப்போம்.
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பேனை வைத்து, அதில் முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2 நிமிடம் முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முட்டை தொக்கு ரெடி!!!